பி.எம்.எம்.ஏ.காதர்;
யுத்தத்தின் பின் வளர்ந்து வருகின்ற எமது நாட்டில் பொதுநலவாய மாநாடு நடப்பது இராஜதந்திர ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்;. இதே போன்று பொதுநலவாய நாடுகளின் தலைவராக எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு வருடம் பதவி வகிக்கப் போவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். என தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டையொட்டி நேற்றுக் காலை (15-11-2013) மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் நடைபெற்ற விஷேட காலைக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மருதமுனை அல்-மதினா வித்தியால அதிபர் ஏ.ஆர். நிஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடை பெற்ற இந்த விஷேட காலைக் கூட்டத்தில் விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் மேலும் உரையாற்றுகையில் :-
எமது நாட்டில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டை நடைபெறாமல் தடுப்பதற்கு புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் சில சர்வதேச நாடுகள். மனித உரிமை அமைப்புக்கள் எடுத்த முயற்சிகளை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இராஜதந்திர ரீதியாக முறியடித்தள்ளார்.
மேலும் உப மாநாடுகள் இளைஞர் மாநாடு உள்ளீட்ட எட்டுத் தலைப்புக்களில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இம்மாநாட்டின் முலம் எமது இலங்கைத் திருநாட்டின் கலை, கலாசார விழுமியங்கள் 53 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது.
இதே போன்று பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு பல தொழில் துறைகளுக்கு முதலீpடு செய்வதற்கு முன்வந்துள்ளனா.; இதனால் எமது நாடு இன்னும் அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பலர் தொழில் வாய்ப்புக்களைப் பெறவுள்ளனர்.
இன்னும் தனியார் பல்கலைக் கழகங்கள்; அமைக்கப்படவுள்ளது இதன் காரணமாக பெருந்தொகையான மாணவர்கள் நன்மையடையப்; போகின்றார்கள் இதனால் இலங்கையின் கல்வி வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பக்கள் அதிகம் உள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
இந்த நாட்டைப்பற்றியும், மனிதநேய செயற்பாடகள் மற்றும் போர்குற்றங்கள,;மனித உரிமை மீறல்கள் பற்றியும் பிழையாக முன் மொழியப்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களைக் களையும் களமாகவும், இந்த பொதுநலவாய மாநாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை என விரிவுரையாளர் பாஸில் மேலும் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment