• Latest News

    November 16, 2013

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மருத்துவமனையில்

    இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கடும் காய்ச்சலினால் அவதிப்பட்ட அப்துல்கலாம், புது தில்லியிலுள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது. அண்மைய வாரங்களாக தொடர்ச்சியாக பயணங்களில் ஈடுபட்டுவந்துள்ள அப்துல் கலாமை ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
    அவரது இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் இயக்கங்கள் எல்லாம் சீராகவே இருப்பதாகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவின் அணு ஆராய்ச்சித் துறையில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு 82 வயதாகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மருத்துவமனையில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top