சம்சு தீன்;
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை ஆற்றை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை. திட்டமிடப்படாத வகையில், எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காது செய்ய வேண்டாம். எங்களின் நியாயமான கருத்துக்களையும் உள்வாங்கிச் செய்யுமாறே கேட்கின்றோம்.
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை ஆழமாக்குவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (15.12.2013) நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோணாவத்தை ஆற்றினை ஆழமாக்கும் விடயத்தில் எங்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அமைச்சர் உதுமாலெவ்வை கேட்காது தான்தோன்றித் தனமாக செய்ய முடியாது.
'சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தினை இற்றைக்கு பலவருடங்களுக்கு முன்னர் காலத்திற்கு காலம் வந்த ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொண்டன. ஆயினும் அவை தோல்விடைந்து கைவிடப்பட்டுள்ளன. இயற்கையின் பூலோக அடிப்டையில்
களப்பினது நீர்மட்டத்தினை விட கடல் மட்டம் உயர்ந்திருப்பதே இதற்கான காரணமாகும். இவ்வாறான நிலையில், கடந்த காலங்களில் இம்முயற்சி ஏன் தோல்வியைத் தழுவிக் கொண்டதென்று சரியாக அறிந்து கொள்ளாது சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தினை பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து இன்று சுமார் 1,200 ஏக்கர் காணிகளில் செய்கை பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வடிச்சலினூடாக வேறு பிரதேசங்களின் நீரும் வருகின்றமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கோணாவத்தை கல்லோயா கொட்டுப் பாலம் உண்மையில் வடிச்சல் திட்டத்திற்கு தடையாகவே காணப்படுகின்றது. அதனை மாற்றி அமைத்து நீர் விரைவாக செல்வதற்கான வழியினை அமைக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் கோணாவத்தை அபிவிருத்தி வேலைத்திட்டம் எங்களது ஆலோசனை, கருத்துக்கள் எதுவும் பெறப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதனை இட்டு வன்மையாக கண்டிக்கின்றோம்.
இப்பிரதேச மக்களது அதிகடிப்படியான வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரத்திற்கு நாங்கள் வந்துள்ளோம். மட்டுமல்லாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கும் பங்காளியாக உள்ளோம் என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன். மேலும் பாய்ச்சல் இல்லாமல் பல்லாயிரக் கணக்கான நெற் காணிகள் எமது பிரதேசங்களில் இருக்கின்றன. அவற்றிற்கு பாய்ச்சல் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என மாகாண நீர்ப்பாசன அமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில்
'கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வேலைதிட்டமும் பிரதேச சபையின் அங்கீகாரத்தையோ கருத்தையோ பெற்றிருக்கவில்லை.கோணாவத்தை அபிவிருத்திக்கு முன்னர் கோணாவத்தை ஆற்றுக்கான உண்மையான எல்லைகளை நீர்ப்பாசன திணைக்களம் அடையாளம் இட்டிருக்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கான அறிவித்தல்களை கடிதம் மூலம் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் மேற்கொள்ளாது அடாவடித்தனமாக மக்களின் காணிகளையும் வாழ்வாதாரமாக அமைந்த தென்னை மரங்களையும் அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையினை கண்டிக்கின்றேன்.
இவ்வாறான தவறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது அதிகாரிகளும் அவற்றிற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். ஜெய்க்கா திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வீதிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. மழை காலங்களில் வீதிகளில் நீர் தேங்கி நிற்கின்றது. பல வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இதேவேளை அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாஉல்லாவினால் திட்டமிட்ட முறையில் மிகவும் நுட்பமாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலும் கட்டடங்களும், வீதிகளும், வடிகாண்களும் அமைத்து வருகின்றமையினை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
ஆளும் கட்சியின் பங்காளி கட்சியாக மு.கா. கட்சி இருந்த போதிலும் எமது கருத்துக்கள், ஆலோசனைகள் அதிகாரிகள் மற்றும் வேறு தரப்பினர் மத்தியில் கண்டுகொள்வதில்லை. இதற்கான காரணம் சிறுபான்மை இனக் கட்சி என்பதாலும், சமூகத்திற்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக மு.கா. கட்சி இருப்பதனாலுமே ஆகும்' என்றார்.

0 comments:
Post a Comment