வடக்கு, கிழக்கு மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் தீர்ப்பை வழங்க போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறியிருந்தாகவும் அவர் அந்த தீர்ப்பை எதிர்த்ததாகவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் தீர்ப்பை வழங்க தீர்மானித்த போது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சரத் என் சில்வா.முன்னாள் பிரதம நீதியரசர் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரிக்கும் தீர்ப்பை மகிந்த ராஜபக்ஷ நேரடியாக எதிர்த்தார். வடக்கு கிழக்கு மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் தீர்ப்பு பற்றி அவருக்கு நான் தனிப்பட்ட ரீதியில் அறிவித்திருந்தேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தேன். மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் தீர்ப்பை கட்டாயம் வழங்க வேண்டும் என நான் கூறினேன்.
ஞாபகப்படுத்த வேண்டாம். பைத்தியமா, நாம் எப்படி யுத்தத்தை செய்வது என்று மகிந்த கூறினார். யுத்தத்தை செய்ய முடியாது என்பது வேறு. இந்த தீர்ப்பை இன்னும் நாட்களில் வழங்குவேன் என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.
இந்த தீர்ப்பின் பின்னர் மாவிலாறு அணை மூடப்பட்டதுடன் இடைவிடாத யுத்தம் ஆரம்பமானது என சரத் என் சில்வா இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment