• Latest News

    December 11, 2014

    கல்முனை பொதுச் சந்தையின் நீண்டகால அவலம் ! இது கல்முனை மாநகர சபையின் மேயரின் கவனத்திற்கு

    யு.எல்.எம்.றியாஸ்: அம்பாறை மாவட்டத்தில் வர்த்தகத்துறையில் மிக முக்கிய கேந்திர நிலையமாக திகழும்  கல்முனை பொதுச்சந்தை தற்போது பாரிய சீர்கேடுகளுடன் காணப்படுகின்றது.

    இம்மாவட்டத்தின் மிக முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகத்திகளும் இப்பொதுச்சந்தை கல்முனை மாநகர சபையின் முகாமைத்துவத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
     
    கல்முனை பொதுச்சந்தை முன்னாள் அமைச்சர் ஏ,ஆர்.எம். மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 1982ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட  இப் பொதுச்சந்தை இன்றுவரைக்கும் எதுவித பாரிய அபிவிருத்தியும் இன்றி கவனிப்பார் அற்றுக் காணப்படுகின்றது.

    காலத்திற்கு காலம் வரும் ஆட்சியாளர்களால் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு பாரிய ஏமாற்றங்களையே முடிவுகளாக பெற்றுவரும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு இப் பொதுச்சந்தை வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    வருடா வருடம் பல இலட்சம் ரூபாய்களை கல்முனை  மாநகர சபைக்கு வாடகையாக செலுத்திவரும் இவ் வர்த்தகர்களின் வியாபார நடவைக்கை மேம்பாட்டு விடயத்தில் கல்முனை  மாநகர சபை பாராமுகமாகவே இன்றுவரைக்கும் இருந்துவருகின்றது.

    மழைகாலங்களில் இப் பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கைகள மேற்கொள்வதில் வர்த்தகர்கள் முதல் நுகர்வோர்கள் வரைக்கும் பாரிய சிரமங்களையும் சுகாதார சீர்கேடுகளையும் எதிகொண்டுவருகின்றனர்.

    முறையான பொது மல சல கூட வசதி , நீர்வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் கூட இப் பொதுச்சந்தையில் சரியாக இயங்காமை  பெரும்குரைபாடாகவே காணப்படுகின்றது. இதனால் வர்த்தகர்கள்  முதல் நுகர்வோர் வரைக்கும் பொதுத் தேவைகளை நிறைவேற்றுவதில் பலசிரமங்களை ஒவ்வொருநாளும் எதிர்கொண்டுவருகின்றனர்.

    அன்றாட வியாபாரத்தையே தனது ஜீவனோபாயமாக செய்துவரும் இவ் வியாபாரிகளுக்கு மழைகாலம் ஆரம்பித்துவிட்டால் தமது வியாபார நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
     
    அக்காலங்களில்  வியாபார நடவடிக்கைகளும் மந்தமாகவே இடம்பெறுவதாக வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள் காரணம் சேறும்  சகதியுமாக பொதுச்சந்தை காணப்படுவதால்  பொதுமக்கள் பொருட்கொள்வனவுகளுக்கு வருவதில்லை   இதனால் எமது வியாபார நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் மழைவந்தால் மேலும்  தண்ணி ,கீழும்  தண்ணி வடிந்தோட முறையான வடிகான் வசதி இல்லை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
     
    மரக்கறிகள் அனைத்தும் அளிவடைக்ன்றது பாதுகாப்பாக வைப்பதற்குக் கூட இடவசசதிகள் கூட எங்களுக்கு இல்லை எல்ல இடம்களும் நீர் வருகின்றது இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டுதான் மழைகாலங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

    பலமுறை இப் பொதுச்சந்தை சீர்கேடுகள் தொடர்பாக  வர்த்தகர்கள் சங்கம் கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தும்  எதுவித பலனும் இன்றி ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.
     
    பல்லின சமூகங்களின் வாழ்வாதாரமாக திகழும் இப் பொதுச்சந்தையின்  குறைகள் நீங்கி நவீனமயப்படுத்தப்பட்டு வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மன நிறைவோடு மேற்கொள்ளும்   நாள் எப்போது வரும் என்ற ஏக்கப்  பெருமூச்சு தினம் தினம் இவர்களை வாட்டிக்கொண்டே வருகின்றது கிடைக்குமா இவர்களுக்கு விடிவு?







     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை பொதுச் சந்தையின் நீண்டகால அவலம் ! இது கல்முனை மாநகர சபையின் மேயரின் கவனத்திற்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top