அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியை பெற்றுள்ளதுமுஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பைசால் காசிம், ஹரீஸ், மற்றும் மன்ஸூர் ஆகிய வேட்பாளர்கள் கூடிய விருப்பு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கண்டி மாவட்டத்தில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிட்டு ஒரு ஆசனம் என மொத்தம் 05 ஆசனங்களை பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மௌலானாவும் கண்டியில் முகா தலைவர் ரவூப் ஹக்கீமும் கூடிய விருப்பு வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக தனித்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம் நம்பிக்கையை பெற்ற மாற்று அணியாக தனது அங்கிகாரத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment