• Latest News

    August 20, 2015

    மன்சூருக்கு அமைச்சபு பதவி கோருகின்றார் முஸ்தபா

    கடந்த ஒரு தசாப்த காலமாக சம்மாந்துறை மக்கள் இழந்து தவித்த  பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது இம் முறை மன்சூரின் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மன்சூர் அவர்களினை அம்பாறையில் இருந்து பெருந் திரளான சம்மாந்துறை மக்கள் ஊர் வலமாக அழைத்து வந்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருந்தனர்.இதன் போது  சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளிவாயலில் விசேட துஆ பிராத்தனை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந் நிகழ்வில் மௌலவி றம்சுன் காரியப்பர் அவர்களினைத் தொடர்ந்து உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணியும்இமு.கா உயர்பீட உறுப்பினரும்இமுன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை எதிர் கட்சித் தலைவருமான முஸ்தபா அவர்களின் உரை மிகவும் முக்கியமானதொரு உரையாக சம்மாந்துறை மக்களினால் அவ் இடத்தில் நோக்கப்பட்டது.இதில் உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி முஸ்தபா அவர்கள் வெற்றி வியூகம் வகுத்து சம்மாந்துறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இலகுவாக பெற்றுக் கொள்ள வழி வகை செய்த மு.கா தலைமைக்கும்இமு.கா தலைமையின் வெற்றி வியூகத்தினை ஏற்று அதன் பின்னால் அணிதிரண்டு வாக்களித்த மக்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்ததோடு இத் தேர்தலில் தெரிவாகிய மூன்று உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்தினையும் தனது உரையின் ஆரம்பத்தில் தெரிவித்துக் கொண்டார்.

    இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் சம்மாந்துறை ஊரானது மிகப் பெரிய சனத் தொகையினைக் கொண்ட ஊர் என்பதனாலும்இசம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக தங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்திருப்பதனாலும் அதீத தேவைப் பாடுகளுடன் உள்ளனர்.இத் தேவைகள் அனைத்தினையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் மூலம் ஒரு குறுகிய காலப்பகுதியினுள் அமைச்சர் மன்சூரினால் நிறைவேற்றிக் கொடுப்பது மிகவும் சிரமமானது.முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கச் சாத்தியமா இராஜாங்க அமைச்சினையோ அல்லது பிரதி அமைச்சினையோ மன்சூறிற்கு வழங்கினால் அவர் இம் மக்களின் தேவைகள் அனைத்தினையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அப் பதவி மிகவும் உறுதுணையாக அமையும்.

    கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தெரிவான  மன்சூரிற்கு அமைச்சுப் பதவியினை பெற்றுக் கொடுப்பதில் நான் என்னாலான சிரத்தையினை எடுத்திருந்தேன்.எனது இம் முயற்சிக்கு எமது சம்மாந்துறை மக்கள் போதியளவு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.அதிலும் குறிப்பாக அலியார் ஹசறத் அவர்களின் ஒத்துழைப்பு மறக்க முடியாத ஒன்று எனலாம்.அதே போன்று நாம் இவ் விடயத்திலும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.சம்மாந்துறை மக்களினதும்இசம்மாந்துறையின் முப் பெரும் சபைகளின் ஒத்துழைப்போடும் மன்சூரிற்கு அமைச்சினையோ அல்லது பிரதி அமைச்சினையோ பெற்றுக் கொடுப்பதில் என்னாலான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.

    மு.கா தலைமையிடம் சம்மாந்துறை மக்களின் அளப் பெரிய தேவையினை நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்றம் தெரிவாகியுள்ள மன்சூரிற்கு இராஜாங்க அமைச்சினையோ அல்லது பிரதி அமைச்சினையோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நான் இவ்விடத்தில் சம்மாந்துறை மக்கள் சார்பாக முன் வைக்கின்றேன்.முஸ்லிம் காங்கிரசிற்கு கிடைக்கச் சாத்தியமான அமைச்சுஇபிரதி அமைச்சுக்களினை யாருக்கு வழங்குவது? என்பதன் சாதக பாதகங்களினை ஆராயும் போது சம்மாந்துறை மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி மன்சூரிற்கு அமைச்சினை அல்லது பிரதி அமைச்சினை வழங்கும் என தான் நம்புவதாகவும் கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
    சம்மாந்துறை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மன்சூருக்கு அமைச்சபு பதவி கோருகின்றார் முஸ்தபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top