(எஸ்.அஷ்ரப்கான்)
நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் நாபீர் அவர்களிடம் கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் 6 ஏ இல் வசிக்கும்
சுமார் 150 விதவைப் பெண்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) மாலை
ஏறாவூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர், நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் நாபீர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மத் முபாறக் உட்பட பிரதேச புத்திஜீவிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





0 comments:
Post a Comment