• Latest News

    August 07, 2016

    பொது மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கே பயிற்சிப் பட்டறைகள்!

    பைஷல் இஸ்மாயில் -
    கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அரச சேவைகளில் கடமையாற்றிய 5 வீதமானோர்கள் 100 வீதமான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர். அதே சேவைகளை இன்று 100 பேர் இருந்துகொண்டு 5 வீதமான சேவைகளையே தற்போது பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் P .புவனேந்திரன் தெரிவித்தார்.

    அம்பாறை மாவட்டங்களிலுள்ள அரச சேவைகளில் கடமையாற்றிவரும்  மாநகர சபை, பிரதேச சபை, வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயம், நீர்பாகன காரியாலயம், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் காரியாலம் போன்ற நிருவனங்களில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கான 2 நாள் உற்பத்தித்திறன் பயிற்சி பட்டறையின் இறுதிநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை (12) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.

    இந்த பயிற்சி பட்டறைக்கு வளவாளராக கலந்து கொண்டு அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக அரச நிருவனங்களில் ஆளணியினை அதிகரித்து ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒவ்வொரு உத்தியோகத்தர்களை நியமனம் செய்து அந்த சேவைகளை மிகத் துரிதமாக பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே அவ்வாறு ஆளணியினை அதிகரித்து நியமனம் செய்துள்ளது.

    பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தாமதமாகக் காரணம் இதை அவர்கள் சரியாக 5 எஸ் திட்டத்துடன் செய்து வராமையினாலேயே இவ்வாறு பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் மிகத்தாமதம் ஆகின்றது. இதனை சரி செய்யவேண்டும் என்பதற்காக அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 367  உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமனம் செய்து அதற்கான உற்பத்தித்திறன் பயிற்சி பட்டறைகளையும் வழங்கி வருகின்றது.

    இந்த 5 எஸ் திட்டத்தினை அமுல்படுத்தும் நோக்கிலும் பொதுமக்களின் சேவைகளை தாமதமாக்காமல் உடனுக்குடன் அவர்களின் வேலைகளை நிறைவு செய்துகொடுக்கவேண்டும் என்ற நோக்கிலுமே இவ்வாறான உற்பத்தித்தறன் பயிற்சி பட்டறைகளை இன்று அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தில் மிக சிறந்த சேவைகளை மிக அதிகமாக பாடசாலைகளே செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

    இந்த பயிற்சி பட்டறை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிருவனங்களில் கடமையாற்றும் 110 பேர் கலந்துகொண்டடு சிறந்த பயன்களையும் அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
     
      

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கே பயிற்சிப் பட்டறைகள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top