ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை சந்தித்து பிரதமர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை
சேர்ந்த 17 பேர் தன்னுடன் இருப்பதாக கூறியுள்ள இந்த முக்கிய அமைச்சர்,
பிரதமர் பதவியை தனக்கு வழங்கினால், அந்த 17 பேருடன் மிக முக்கியமான
தீர்மானத்தை எடுக்க தயார் என ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகித்து,
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்டு
வெற்றிப்பெற்ற அமைச்சரே ஜனாதிபதியிடம் பிரதமர் பதவியை கோரியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
எது எப்படி இருந்த போதிலும் கூட்டு
எதிர்க்கட்சியினர் மற்றும் அதனை சார்ந்த சிலர் அமைப்புகள் அரசாங்கத்தை
ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் உண்மைக்கு புறம்பான பல்வேறு
செய்திகளை பரப்பி வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றமையும்
சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:
Post a Comment