தேர்தலை நடத்தாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நாடு
முழுவதிலும் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்களாக மேஜர் ஜெனரல்களையும் 25
மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களாக 25 பிரிகேடியர்களையும் நியமித்து, நாட்டை
நிர்வகிக்க வேண்டும் என்ற யோசனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ்
மட்டத்தில் மிகவும் பிரபலமாகி இருப்பதாக தெரியவருகிறது.
அனைத்து
அரசியல்வாதிகளையும் அரச நிர்வாகத்தில் இருந்து நீக்கி, ஜனாதிபதி இதனை
முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் கீழ் மட்டத்தினர் மத்தியில்
பேசப்பட்டு வருகிறது.
இந்த கருத்துக்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான
பல்வேறு பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன் அதற்கு
பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவி வருவது, அதன்
ஊடாக ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்க்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு
தேவையான வகையில் செயற்பட அவருக்கு தனி அதிகாரம் இருக்க வேண்டும் என்பது
பொதுஜன பெரமுனவின் கீழ் மட்ட உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்து
வருகிறது.
இவ்வாறான நிலைமையிலேயே நாடாளுமன்றத் தேர்தல்களை குறைந்தது
மூன்று ஆண்டுகளுக்காவது ஒத்திவைக்க வேண்டும் என அஸ்கிரிய அநுநாயக்கர்
அண்மையில் கூறியிருந்தார்.
TW
0 comments:
Post a Comment