• Latest News

    April 07, 2020

    கொரனா பற்றிய வதந்தியை கட்டுப்படுத்த வாட்சப் புதிய நடவடிக்கை

    கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்று தொடர்பான போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பை வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்று -07- அறிவித்துள்ளது.

    அதன்படி, ஏற்கனவே அதிகமுறை பகிரப்பட்ட ஒரு செய்தியை வாட்சப் பயனர்களால் இனி ஒருமுறை மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில், ’ஃபார்வர்ட்’ செய்திகளை கட்டுப்பாடுகள் இன்றி பலருக்கும் பகிரும் வசதி இருந்தது. பின்னர், போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை நிறுவனம் அறிவித்திருந்தது. ஒரு மெஸேஜ் ஃபார்வட் செய்யப்பட்டது என்பதை குறிக்கும் அம்சங்களும் கொண்டுவரப்பட்டன.

    கொரோனா குறித்த தவறான தகவல்களை பதிவிட்டால் அவர்களின் பதிவு நீக்கப்படும் என ஏற்கனவே முகநூல் மற்றும் டிவிட்டர் வலைதளங்கள் தெரிவித்திருந்த நிலையில், போலிச் செய்திகளை தடுக்க இனி ஃபார்வர்ட் செய்திகளை ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை வாட்சப் கொண்டு வந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரனா பற்றிய வதந்தியை கட்டுப்படுத்த வாட்சப் புதிய நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top