இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு
மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை
ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது. உலக மக்கள் தொகை
வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும்
அதே நிலைதான். ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்
இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால்
அபாயகரமானது.
நாட்டில் நடைபெற்ற யுத்தமானது நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக் காலங்களில் கூட பாடசாலைக்கு முதலாந் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்தே சென்றது. ஆனால் இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment