• Latest News

    March 16, 2022

    தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் நிந்தவூர் மஸ்ஹர் முன்னிலை

     நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் 2021ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 13 மாணவிகள் சித்தியடைந்துள்ளார்கள். நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் அதிகமானவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக இப்பாடசாலை திகழ்கின்றது. நிந்தவூர் கோட்டத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தொடர்ச்சியாக இப்பாடசாலை முதல் இடத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இம்மாணவிகளையும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரை இன்று காலை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பாராட்டினார். அத்தோடு மாணவிகளுக்கு மாலை அணிவித்து கௌரவித்தார். இதன் போது கல்முனை வலய ஆங்கிலப் பாடத்திற்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல், நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.எம்.ஏ.சலாம் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.










     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் நிந்தவூர் மஸ்ஹர் முன்னிலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top