எஸ்.றிபான் -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிக்குளம் மலை காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.
பொது மக்களினால் நேற்று (05.03.2025) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சடலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படுவது அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று, அலிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று காணாமல் போனவர்களின் உறவினர்களினால் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் காணாப் போனவர்களின் உறவினர்களினால் குறித்த சடலம் காணாமல் போனதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அக்கரைப்பற்று, அலிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த ஏரப்பன் ராமன் (வயது 69) என அடையாளம் காணப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து இன்று அம்பாரை தடவியல் பிரிவு பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து குறித்த மரணம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






0 comments:
Post a Comment