• Latest News

    August 23, 2013

    உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது

    உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக தீர்வை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கும் பெரிய வெங்காயமும் தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.
    இந்த நிலையில் உள்ளூர் விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும் வகையில்,  தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக தீர்வை 25 ரூபாவில் இருந்து 45 ரூபாவாக அதிகரித்துள்ளது.
    இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான தீர்வையும் 30 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதென நிதி அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top