• Latest News

    August 22, 2013

    வஸீம் அக்ரம் மறுமணம் செய்­தார்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வ­ரான வஸிம் அக்ரம் தனது அவுஸ்­தி­ரே­லிய காத­லி­யான ஷனீரா தொம்­ஸனை திரு­மணம் செய்­து­கொண்­ட­தாக இன்று புதன்­கி­ழமை அறி­வித்தார்.
    பாகிஸ்­தானின் லாகூர் நக ரில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி இத்­தி­ரு­மணம் நடை­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
     47 வய­தான வஸிம் அக்­ரமின் முதல் மனை­வி­யான ஹுமா நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு கால­மானார்.
    இந்­நிலையில் 30 வய­தான ஷனீரா தொம்­ஸனை வஸிம் அக்ரம் திரு­மணம் செய்­துள்ளார்.
    ஷனீரா லாகூ­ருக்குச் செல்­வ­தற்­குமுன், இம்­மாத முற்­ப­கு­தியில் கராச்­சிக்கு சென்று, அங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள வஸிம் அக்­ரமின் தந்­தையை சந்­தித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
    “கடந்­த­வாரம் எளி­மையான வைப­வ­மொன்றில் ஷனீ­ராவை நான் திரு­மணம் செய்தேன். இது எனக்கும் எனது பிள்­ளை­க­ளுக்கும் புதிய வாழ்க்­கையின் ஆரம்­ப­மாகும்” என வஸிம் அக்­ரம்­ கூ­றினார்.
    தற்­போது ஷனீரா தொம்ஸன் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ள­தா­கவும் அவர், உருது மொழியை கற்று வரு­வ­தா­கவும் வஸிம் அக்ரம் தெரி­வித்­துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வஸீம் அக்ரம் மறுமணம் செய்­தார் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top