• Latest News

    July 12, 2014

    கல்முனை விர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்த்தார் நிகழ்வு

    எம்.ஐ.சம்சுதீன்: கல்முனை விர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்த்தார் நிகழ்வு 2014-07-11 ம் திகதி கல்முனை அல் பஹ்றியா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்வைபாவத்தில் மௌலவி யூ.எல்.அம்சத்அலி  அவர்கள் விசேட மார்க்க செட்பொழிவாற்றினார்.

    நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மாநகரசபை உறுப்பினர் உமர் அலி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எ.எல்.எம்.நஸீர் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுறுயு.கப்பார் கல்விப்பணிப்பாளர் எ.எல்.எ.ஜலீல் வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.எம்.எ.கரீம் போன்றோருடன் கழக பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் பள்ளிவாசல் பிரதிநிதிகள் போன்றோருடன் பெரும்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
    கல்முனை விர்லியன்ட் விளையாட்டுக் கலக்கம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக சமூக சேவை நிகழ்வுகள் சமய நிகழ்வுகளிலும் பங்கு பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை விர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்த்தார் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top