• Latest News

    April 04, 2016

    விளையாட்டு கழகங்களின் தேவைகளை கேட்டறிந்தார் ஹாிஸ்

    (எஸ்.எம்.எம்.றம்ஸான் )
    கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் தேவைப்பாடுகளை கேட்டறியும் கலந்துரையாடல் நேற்றிரவு கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில்இடம்பெற்றது.

    விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்இடம்பெற்றஇந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார்உள்ளிட்ட கல்முனை பிரதேச விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.

    இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

    கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடியமைதானமாக விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் அபிவிருத்திபணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் வீரர்கள் விளையாடுவதற்கு மாற்று மைதானம்ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    விளையாட்டுக்கழகங்களில் விசேட திறமை காட்டும் வீரர்களுக்கு மேலதிகபயிற்சிகளை கொழும்பு மற்றும் இதர பிரதேசங்களில் சர்வதேச தரபயிற்சியாளர்களைக் கொண்டு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.அத்தோடு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கானநடவடிக்கைகள் அமைச்சு மட்டத்தில் நடைபெற்று வருகின்றது. அவ்உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ்தெரிவித்தார்.

    இதன்போது விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கல்முனை பிரதேசகழகங்களை உள்ளடக்கிய சம்மேளனம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்தனர்.

    இதற்கு ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உடற்கல்விவிரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்டவிளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் ஆகியோரை உள்வாங்கி சகல கழகங்களின்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய சம்மேளனத்தினை அமைத்துக் கொள்ளுமாறுபிரதி அமைச்சர் ஹரீஸ் ஆலோசனை வழங்கினார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விளையாட்டு கழகங்களின் தேவைகளை கேட்டறிந்தார் ஹாிஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top