• Latest News

    July 26, 2016

    18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு பணம் வாங்கப்பட்டதா? உண்மையா?முழக்கம் மஜீத்திற்கு சந்தேகம்

    சிராஜ்-
    மு.காவின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ஏ.எல்.அப்துல் மஜீத் 18ஆவது திருத்த சட்டத்தின்போது ரவூப் ஹக்கீம் பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று  ஏறாவூர் மாக்கான் மாகார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது தொிவித்திருந்தார்.

    இவரது இக்கருத்து மு.காவின் வட்டாரத்திலும், ஆதரவாளர்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு மு.கா வாக்களித்தமைக்கு பணம் பாிமாறப்பட்டதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையிலும், அது குறித்து மு.காவின் தலைவரோ, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ எக்கருத்தையும் முன் வைக்காத நிலையில் அப்துல் மஜீத்தின் கருத்து மு.காவின் தலைவர் 18வது சரத்திற்கு பணம் வாங்கியிருக்கக் கூடுமென்ற சந்தேகத்தை  அதிகாிக்கச் செய்வதாக இருக்கின்றது.

    ஆதலால், மு.காவின் தலைவர்  ரவூப் ஹக்கீம் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவாின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் எமது இணையத்திற்கு தொிவித்தார்.

    அவர்18ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் பணம் பெற்றுக் கொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மை என்றால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தனக்கு சம்மந்தம் இருக்கவில்லை என்றால் அன்று ஏன் அவர் அதனை வெளியிடவில்லை. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ், முஸ்லீம் சமூகங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஹசன் அலி கூறி வந்தார். ஆனால் இணைக்கப்படக் கூடாது என்று மகன் கூறுகின்றார்.” என்று தொிவித்துள்ளமை. ஆதலால், உண்மை, பொய்யை கட்சியின் தலைவரே விளக்க வேண்டும்.
      
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு பணம் வாங்கப்பட்டதா? உண்மையா?முழக்கம் மஜீத்திற்கு சந்தேகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top