• Latest News

    July 27, 2016

    கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர தொழிநுட்ப பீட மாணவர்தின விழா

    எம்.ஐ.எம்.அஸ்ஹர், யூ.கே.காலித்தீன்-
    கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர தொழிநுட்ப பீட மாணவர்தின விழா நேற்று (27) கல்லூரியின் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு பீகாஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கியதோடு நினைவு மலரையும் வெளியிட்டு வைத்தார்.
    கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதல் நிலைபெற்ற மாணவர்களும் பாடரீதியாக, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களும் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

    மேலும் இந்நிகழ்வுக்கு அம்பாறை  தேசிய வைத்தியசாலையின் பல்வைத்திய துறை நிபுணர் டாக்டர் ஏ.அஹமட் வாசீல் வாரீத், முன்னாள் அதிபர் ஏ.எம்.ஹுசைன்,  பிசிஈ

     நிறுவனத்தின் தவிசாளர் ரிசாத் ஷரிப்  , கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர் ஏ. ஆதம்பாவா, உதவி பகுதி தலைவர் எம்.ஐ.எம்.பசீல் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் மாணவர்களால் கற்பித்த ஆசான்களுக்கும்  நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டன.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர தொழிநுட்ப பீட மாணவர்தின விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top