• Latest News

    July 28, 2016

    வெறிச்சோடியது பல்கலைக்கழகம்!..

    எம்.வை.அமீர் -
    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளான (2016-07-28) ஆம் திகதியும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.
    தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்திலும் அங்கு கடமையாற்றும் கல்விசார ஊழியர்களால் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த பணிப்பகிஸ்கரிப்பினால் மாணவர்களின் வருகை அரிதாக இருந்ததுடன் கல்விநடவடிக்கைகள் இடம்பெறாததன் காரணமாக பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
    இங்கு கருத்துத்தெரிவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதி நிதி ஏ.றிபாயிஸ் முகம்மட் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்களில் கூட்டு அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானது என்றும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெறிச்சோடியது பல்கலைக்கழகம்!.. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top