• Latest News

    November 14, 2017

    68வது படைப்பிரிவால் G.C.E O/L கருத்தரங்கு

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 400ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.
    புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர் குழுவினர் கலந்துகொண்டனர்.

    இக்கருத்தரங்கிற்கான நிதியுதவினை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68வது பிரிவு தலைமையகம் வழங்கியது.

    கருத்தரங்கில் பங்குகொண்ட மாணவர்களுக்கு விரிவுரை மற்றும் உதவிக்குறிப்புக்கள் அடங்கிய கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என்பனவும் இதன்போது வழங்கப்பட்டது.

    உள்ளுர் மாணவ சமூகத்தின் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இந்த சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மற்றுமொரு திட்டம் கிளிநொச்சி படைவீரர்களினால் கிளிநொச்சி திவாம்பிட்டி அரசாங்க தமிழ் பாடசாலையில் 312 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

    இந்த சமூக நலத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நிதி அனுசரணை வழங்கியதுடன் சுமார் ரூபா 3000,000 பெறுமதியான பாடசாலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இதன்போது வழங்கி வைககப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 68வது படைப்பிரிவால் G.C.E O/L கருத்தரங்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top