• Latest News

    December 12, 2017

    தலவாகல்லை சந்திரசேகரன் கிராம வீதி திறந்து வைப்பு

    - பா.திருஞானம் - 

    லவாகல்லை சந்திரசேகரன் கிராமத்திற்கு தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி செயற்திட்டத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாதை மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டது

    இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர் இராஜாராம் முன்னனியின் பிரதி செயலாளர் செல்வி அனுஷா சந்திரசேகரன்¸ உட்பட மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் முன்னணியின் உதவிச் செயலாளர் எஸ்.அஜித்குமார் உட்பட மாவட்ட தலைவர்கள்¸ நிர்வாக இயக்குனர்கள்¸ காரியாலய உத்தியோகஸ்தர்கள் உட்பட தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலவாகல்லை சந்திரசேகரன் கிராம வீதி திறந்து வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top