தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஓருவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் இன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராக விளங்கிய பாலசுப்பிரமணியம் அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களுமே இவ்வாறு இணைந்து கொண்டனர்.
போரால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தை முன்னர் தான் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை எனவும் அரசுடன் இணைந்து அபிவிருத்தியினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் எனவும் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
குறித்த ஊடக சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment