மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சினால் இலவசமாக வழங்கப்படும் வைத்திய மற்றும் தனியாள் காப்புறுதித் திடடமான " சுரக்ஸா" மாணவர் காப்பீட்டு திட்டம் சம்மாந்துறையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஆரோக்கியமிக்க சுறு சுறுப்பான மாணவர் பரம்பரைக்காக எனும் தொணிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம் சம்மாந்துறை கல்வி வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது
இதற்கமைய சம்மாந்துறை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் இது தொடர்பான வைபவம் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வைபவத்திற்கு சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஹமட் கியாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இது திடடம் தொடர்பான கையேடுகளை பெற்ரார்களுக்கு வழங்கி வைத்தார்
இந்த வைபவத்தில் உதவிக் கல்விப். பணிப்பாளர், பெற்ரார்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்




0 comments:
Post a Comment