• Latest News

    December 11, 2017

    ஐ.தே.க. சார்பில் மு.கா. இன்று கட்டுப்பணம் செலுத்தியது

    - யு.எல்.எம். றியாஸ் -

    திகாமடுல்ல மாவட்டத்திலும் உள்ளுராட்ச்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதில் அரசியல் கட்சிகள், சுயேற்சைக் குழுக்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    இதற்கமைய இன்று சம்மாந்துறை, இறக்காமம் பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக்  கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கட்டுப்பணத்தை அம்பாறை மாவட்ட தேர்தல்  செயலகத்தில்  செலுத்தினர். 

    இதேவேளை அக்கரைப்பற்று மாநகர சபை, அடடளைச்சேனை மற்றும்  அக்கரைப்பற்று பிரதேச சபைகளுக்கான  கட்டுப்பணத்தை பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கட்டுப்பணத்தினை மாவட்ட தேர்தல்  செயலகத்தில் செலுத்தினார். 

    இதன் பின்னர் இவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் 
    நடைபெற உள்ள  உள்ளுராட்ச்சி மன்றத் தேர்தலில்  எந்த கூட்டமைப்பு வந்தாலும் மக்கள் எமது பக்கம் உள்ளார்கள்  இதை  உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.க. சார்பில் மு.கா. இன்று கட்டுப்பணம் செலுத்தியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top