• Latest News

    December 07, 2017

    M.P. கேட்டு அட்டாளைச்சேனை மக்கள் நிந்தவூரில் குழப்பம்

    - அம்பலத்தார் -
    ற்போது நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் மு.காவின் சார்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     இத்தெரிவுக்கு வந்த அட்டாளைச்சேனைச் சேர்ந்தவர்கள் தேசியப் பட்டியலில் எம்.பி தந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்கள். அத்தோடு யானைச் சின்னத்திலும் போட்டியிட முடியாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தெரிவித்துள்ளார். 
    இதுவே மத்திய குழுவின்  தீர்மானமாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதேவேளை அங்கிருந்த பழீல் B.A எம்.பி தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அங்கு ஏற்பட்ட குழப்பத்தினால் எம்.பி தராமல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறிச் சென்றுள்ளார்கள். 

    இத்தெரிவினை பைசால் எம்.பி, நிஸாம் காரியப்பர் ஆகியோர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: M.P. கேட்டு அட்டாளைச்சேனை மக்கள் நிந்தவூரில் குழப்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top