ஹொரவபொத்தான அளுத்ஓயா வீதியில், ஹபகம பிரதேசத்தில், யான் ஓயாவுக்கு
அருகில் நேற்று (12) டி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய
துப்பாக்கி ரவைகள் 970 என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று நாள் முழுவதும் ஹொவபொத்தான பொலிஸார் மற்றும் தலைமன்னார் கடற்படை
பயிற்சி முகாம் வீரர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்
போதே, இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் டி 56 ரக துப்பாக்கிகள், 970 துப்பாக்கி ரவைகள், 2
வெடிக்குண்டுகள் உட்பட மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத்
தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment