ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு
பயந்து கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக
அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், விசாவை தயார் செய்து வைத்துக்கொள்ளுமாறு
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவுக்கு
அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சஜித்திற்கு பயந்து, நாமல்
ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினரும் வெளிநாடு செல்ல தயாராகி
வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்துகமை பிரதேசத்தில் நடைபெற்ற
கூட்டம் ஒன்றில் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment