• Latest News

    November 28, 2019

    மாவடிப்பள்ளி குடிநீர்ப் பிரச்சினைக்கு றிசாட் பதியூதீன் தீர்வு

    மாவடிப்பள்ளி பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் சொந்த நிதியில் நீா்தாங்கிகள் கொள்வனவு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
     
    தலைவரின் சொந்த நிதியில் மாவடி மக்களுக்கு குடிநீர்த் தாங்கி பகிர்ந்தளிப்பு
    மறைந்த மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களினால் அவரது பிறந்தநாள் பரிசாக மாவடிப்பள்ளி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக அவுஸ்ரேலிய அரசின் நிதியில் பாரிய குடிநீர் தாங்கி ஒன்று கட்டுவதற்கான நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டு அன்றய அவுஸ்ரேலிய தூதுவர் ரொபட்_குக் அவர்களால் அடிக்கல்லும் நடப்பட்டது.

     குறித்த நீர்த் தாங்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் அஷ்ரஃபின் மறைவையடுத்து வந்த தலைமையால் அத்திட்டம் மாவடிப்பள்ளியில் நடைமுறைப்படுத்தப் படவில்லை அதன்பின்னர் குழாய் நீர் வினியோகம் மாவடிப்பள்ளியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் முக்கியமாக வெள்ளிக்கிழைமை நாட்களிலும் மற்றும் பெருநாள் தினங்களிலும் குழாய் நீர்த் தட்டுப்பாடு பெறும் குறைபாடாக இருந்து வந்தது.

     இதனை ஓரளவாவது நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவடிப்பள்ளி மக்களுக்கு நீர்தட்டுப்படும் நாட்களில் நீரை சேமித்து வைக்கக் கூடிய வண்ணம் குடிநீர் தாங்கி பெற்றுக் கொடுப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேசபை உறுப்பினர் எம்.ஜலீல்  தலைமையில் நடந்த கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நிதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனிடம் கோரப்பட்டது.

     அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் தனது சொந்த நிதியில் குறித்த நீர்த் தாங்கிகள் கொள்வனவுக்கு ஒரு மில்லியன் ஒதுக்கப்பட்டு செய்திருந்தார். அந்நிதி மூலம் பெறப்பட்ட குடிநீர் தாங்கிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதன.

     குறித்த தாங்கிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அயராது முயற்சித்த காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் எம்.ஜலீல் அவர்களுக்கும் மாவடிப்பள்ளி மத்திய குழுவுக்கும் இதற்கான நிதியை வழங்கிய அ.இ.ம.கா தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் மாவடிப்பள்ளி மக்கள் 
    நன்றிகளை தெரிவிக்கின்றார்கள்.



     






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாவடிப்பள்ளி குடிநீர்ப் பிரச்சினைக்கு றிசாட் பதியூதீன் தீர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top