• Latest News

    November 12, 2019

    சாய்ந்தமருது மண்ணின் அபிலாசைககளுக்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபு

    எம்.சஹாப்தீன் -
    இந்த  சாய்ந்தமருது மண்ணின் அபிலாசைககளுக்கு நான் ஒரு போதும் தடையாக  இருந்ததில்லை.  இந்த மண்ணை நேசிக்கின்றவன் என்பது உங்களுக்கு தொியும். கல்முனை மாநகர சபையின் மேயராக இருந்த போது இனமத பேதங்களின்றி எல்லா ஊர்களையும் சமமாக மதித்து செயற்பட்டோம்.

    இவ்வாறு அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் உயா்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிபு தலைமையில் (12.11.2019) நடைபெற்ற மகளிா் மாநாட்டில் தொிவித்தாா். 
    ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதாித்து நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பெரும் தொகையான பெண்கள் கலந்து கொண்டார்கள். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
     
    நாங்கள் எல்லோரும் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்.  கடந்த காலத்தில் கல்முனை மாநகர சபையின் முதல்வராக இரந்த காலம் முதல் இந்த மண்ணுக்காக பல்வேறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இந்த மண்ணின் உயர்வுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கும் தயாராகவே இருக்கிறேன். இதனை நாங்கள் கடந்த மாநகர சபைத் தேர்தலில் நிருபித்துள்ளோம்.  


    ஜனாதிபதித் தேர்தலில் ஒரு  சிறந்த ஜனாதிபதியை தொிவு செய்ய வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது அடக்கு முறையை பயன்படுத்தி எங்களை நிம்மதியில்லாமல் வாழச் செய்தார்கள்.  இவற்றுக்கு முற்றுப்புள்ள வைக்கும் நாள்தான் எதிர்வரும் 16ஆம் திகதியாகும்.  முஸ்லிம் சமூகத்திற்குாிய நிம்மதியான நாளாக இருக்கின்றது என்பதனை சொல்லவே உங்களை அழைத்துள்ளேன்.


    இந்த  சாய்ந்தமருது மண்ணின் அபிலாசைகளுக்கு நான் ஒரு போதும் தடையாக  இருந்ததில்லை.  இந்த மண்ணை நேசிக்கின்றவன் என்பது உங்களுக்கு தொியும். கல்முனை மாநகர சபையின் மேயராக இருந்த போது இனமத பேதங்களின்றி எல்லா ஊர்களையும் சமமாக மதித்து செயற்பட்டோம்.

    இன்று நம்முன் சமூகத்தின் தலை விதியை தீர்மானிக்கின்றதொரு தேர்தல் ஒன்று வந்துள்ளது. அதனால், நாங்கள் சாியான முடிவினை எடுக்க வேண்டும். நமது முடிவு முஸ்லிம் சமூகத்திற்கு நிம்மதியை கொடுக்க வேண்டும். இதற்கு நாங்கள் சஜித் பிரேமதாஸவின் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 


    பிரதேசவாதத்திற்கு அப்பால் செயற்பட வேண்டும். எங்களுக்கு ஒரு உள்ளுராட்சி வேண்டுமென்ற தேவை இருந்தால், அதற்கு முன்னதாக இந்த நாட்டிற்கு சிறந்ததொரு தலைவரை தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் பர்தா விவகாரம், ஹலால் பிரச்சினை, நோன்பு பிடிக்க முடியாமலும், பிடித்த நோன்பை திறக்க முடியாதவர்களாக இருந்தோம்.  இதனை கடந்த ஆட்சியில் கண்டோம். தற்போதைய ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தொியும். 


    நாங்கள் எங்களின் வாக்குகளை பயனற்றதாக்கிக் கொள்ளக் கூடாது. எல்லா இனங்களையும் நேசிக்கக் கூடிய சஜித் பிரேமதாஸவின் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்கும் போதுதான் முஸ்லிம் சமூகத்திற்கு பிரயோசனமாக அமையும். அதன் மூலம்தான் நிம்தியான வாழ்வினை அடைந்து கொள்ள முடியும்.

    மீராசாஹிவு மகளிர் அமைப்பின் மூலமாக உங்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வாழ்வாதாரங்களைப் பெற்றுத் தருவோம். எங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியையும், வேறு பல அபிவிருத்திப் பணிகளையும் செய்ய இருக்கின்றோம்.

    ஆதலால், 16ஆம் திகதி சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் இந்த மண்ணை கௌரவிக்க வேண்டுமென்பதற்காகவும், பள்ளிவாசலை கௌரவிக்க வேண்டுமென்பதற்காக பொிய பள்ளிவாசல் அனுப்பிய ஒரு கடித்திற்காக முடிவினை எடுத்து, எமது கட்சி சாய்ந்தமருது மண்ணில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. நான் கூட போட்டியிடவில்லை. என்னை முதல்வராக்குகிறோம் என்று பலரும் சொன்ன  போதிலும், நான் அதற்கு ஆசைப்படவில்லை. அந்த கதிரையில் இருந்தவன். அந்த ஆசை எமக்கில்லை. 

    ஏனெனில் மண்ணின் கௌரவம் முக்கியமென்று நாம் நினைத்தோம். ஆனால், இன்று அது வேறு திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் எங்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அபிவிருத்திகளை பொழியும். இன்று இரு ஊர்களையும் பிாித்து அதில் சிலர் குளிர்காய நினைக்கின்றார்கள். நகர சபை கோாிக்கையை நான்தான் முதலில் முன் வைத்தேன். ஆனால், இன்று பலர் அதற்கு உாிமை கோாிக் கொண்டு தங்களின் அரசியலை வளர்த்துக் கொள்ள பொய்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

    ஆதலால், மிகவும் நிதானமாக சிந்தித்து ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து இலங்கை முஸ்லிம்களின் நிம்மதிக்கு பங்களிப்பு செய்தவர்கள் என்ற நல்ல பெயர்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் தேவைகளை முடிந்தவரை முடித்துத் தருவேன்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது மண்ணின் அபிலாசைககளுக்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top