• Latest News

    November 12, 2019

    நாம் துரத்தியடித்த குடும்ப ஆட்சிக்கு மீண்டும் இடமளிக்கக் கூடாது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

    நாங்கள் நீதிமன்றங்களுக்கு சுதந்திரம் வழங்கினோம். அதனாலேயே கோத்தபாய ராஜபக்ச இன்னும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பதுளையில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
    இன்றையதினம் தேர்தல் ஆணையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் எவ்வித பாரதூரமும் இன்றி சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றார். அது நாம் வழங்கிய சுதந்திரமே. அன்று தேர்தல் ஆணையாளர் பயந்து நடுங்கினார்.

    நாம் அன்று துரத்தியடித்த குடும்ப ஆட்சிக்கு மீண்டும் இடமளிக்கக் கூடாது. அவர்களை துரத்தியடித்து அவர்களுடன் மைத்திரியையும் துரத்தியடிக்க வேண்டும்.

    அன்று அவர் என்ன சொன்னார், ஐந்து வருடத்தில் தான் ஓய்வுப் பெறப்போவதாக கூறினார். அவர் மனைவி வாழை இலையில் கட்டிக் கொடுக்கும் உணவை உண்டு பொலன்னறுவையில் வயல் உழுவதாக கூறினார். ஆனால் இன்று கொழும்பில் சுத்தம் செய்கின்றார்.

    நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு என்னிடம் சஜித் கோரியிருந்தார். நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன்.

    இனி நாட்டில் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இடமில்லை. போதைப்பொருள் வர்த்தகர்களை நாங்கள் நிச்சயம் ஒழிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாம் துரத்தியடித்த குடும்ப ஆட்சிக்கு மீண்டும் இடமளிக்கக் கூடாது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top