• Latest News

    January 28, 2020

    நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலைக்கு கணித பாட ஆசிரியர்களை நியமனம் செய்த கல்விப் பணிப்பாளருக்கு நன்றிகள்

    நிந்தவூர் கமு அல்-மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் தரம் 10 மற்றும் 11 வகுப்புக்களுக்கு கணித பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமை பற்றி நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

    இதே வேளை, இப்பிரச்சினை குறித்து பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிஸாதீன் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.அப்துல் ஜலீலிடம் முறையீடு செய்தமையை அடுத்து இன்று வலயக் கல்வி பணிப்பாளரினால் இரண்டு கணித ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

    இதே வேளை, இவ்வாசிரியர்கள் நியமனம் குறித்து நேற்று முன் தினம் நாம் கிழக்கு மாகாண சிரேஸ்ட கல்விச் செயலாளர், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சிரேஸ்ட செயலாளர் எம்.ரி.ஏ.நிஸாம் இப்பிரச்சினையை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையிலிருந்து கல்முனை மஹ்மூத் பாலிகா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் எஸ்.எம்.நஜீப் சரீப் தற்காலிகமாக மீண்டும் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளை, கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த  எம்.எஸ்.ஜாவிர் என்பவர் அவரது விருப்பத்தின் பேரில் ( பாடசாலையின் அதிபர் குறிப்பிட்ட ஆசிரியரை சந்தித்து சம்மதக் கடிதம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது) நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாசிரியர்கள் நியமனம் செய்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அதிபருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என பெற்றோர்களும், பாடசாலை சமூகத்தினரும், பாடசாலை அபிவிருத்திக் குழுவினரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள். இருந்தாலும் சிலர் தாங்கள்தான் இதனைச் செய்தோம் என்று அல்லவா சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு சிலர் கம்பு நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    முன்னைய செய்தி - https://www.themurasu.com/2020/01/blog-post_29.html
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலைக்கு கணித பாட ஆசிரியர்களை நியமனம் செய்த கல்விப் பணிப்பாளருக்கு நன்றிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top