• Latest News

    January 27, 2020

    வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

    வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கு தினம் மற்றும் நேரத்தை ஒன்லைன் ஊடாக பதிவுசெய்வதற்கு நாளை -27- முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
    அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலி நாளை முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளது.
    கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த இணையத்தள செயலி சோதனைக்குட்படுத்தப்பட்டது. அது வெற்றியளித்த நிலையில், நாளை காலை முதல் இணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை பதிவுசெய்துகொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இதேவேளை இதற்கான கையடக்கத்தொலைபேசி செயலியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாதகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
    சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரத்தை பதிவுசெய்வதற்கு www.ntmi.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு ஜனாதிபதியின் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top