• Latest News

    April 24, 2020

    தேவையேற்படுமானால் ஒரு கிராமத்தையே தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்ப தயார் - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

    தேவையேற்படுமானால் ஒரு கிராமத்தையே தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

    முப்படையினருக்கு மேலதிகமாக இலங்கையின் புலனாய்வினரும் கொரோனா வைரஸ் தொற்றாளிகளை இனங்காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜப்பானிய தூதரகத்தின் உதவி தூதுவரை இன்று சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடக்கல் மாத்திரம் உதவாது.

    எனவே தேவையேற்படின் ஒரு கிராமத்தையே தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்ப அரசாங்கம் தயாராகவே இருப்பதாக கமல் குணரத்ன குறிப்பிட்டார்.

    இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேவையேற்படுமானால் ஒரு கிராமத்தையே தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்ப தயார் - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top