எதிர்வரும் 25ம் திகதியின் பின்னரே பெதுத் தேர்தல் பற்றி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன்
மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதா இல்லையா என்பதனை எதிர்வரும்
25ம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று
தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது
இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தரப்புக்களினால் உச்ச
நீதிமன்றில் பொதுத் தேர்தல் தொடர்பில் மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமையும் தேர்தல் ஆணைக்குழுவினை நெருக்கடியில்
ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் நாட்டின்
தற்போதைய நிலமைகள் குறித்து எதிர்வரும் 25ம் திகதி ஆராய்ந்து பொதுத்
தேர்தல் நடாத்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்
ஆணைக்குழு கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:
Post a Comment