• Latest News

    May 12, 2020

    ஆசிரியை திருமதி றஸீனா 30 வருட சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.


    எம்.சஹாப்தீன் -
    நிந்தவூர் 15ஆம் குறிச்சியை சேர்ந்த ஆசிரியை திருமதி. சித்தி றஸீனா முகம்மட் ஸுபைர் (SLTS 1) தமது 30 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

    நிந்தவூர் கமு/அல் - பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே கடந்த 06.05.2020ஆம் திகதி ஆசிரியர் சேவையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். 

    1990ஆம் ஆண்டு ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
    ஆரம்பப் பிரிவு பயிற்றப்பட்ட ஆசிரியையான இவர் நிந்தவூர் அஸ் - ஸபா வித்தியாலயம், இமாம் றூமி வித்தியாலயம், அறபா வித்தியலாயம், அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார். 

    இப்பாடசாலைகளில் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதுடன், பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டதோடு, நிர்வாகப் பொறுப்புக்களையும் ஏற்று மேற்படி பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளார். 

    அவரது கல்விப் பணியை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நாம் பிராத்திக்கின்றோம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆசிரியை திருமதி றஸீனா 30 வருட சேவையிலிருந்து ஒய்வு பெற்றார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top