(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக
இலங்கையில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை
893 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 4
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாறு
உயர்ந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.
இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களில் 466
முப்படையினர் உள்ளடங்குவதாகவும் அதில் 455 பேர் கடற்படையினர் எனவும்
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று வரை 382 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் மேலும் 502 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று
நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள்,
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை
வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார
வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் மேலும் 105 பேர் கொரனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

0 comments:
Post a Comment