இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன.
நேற்றிரவு மேலும் 22 கொரோனா நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 915 ஆக
அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் மொத்தமாக 26 நோயாளிகள் அடையாளம்
காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெலிசர கடற்படை முகாமிலுள்ள சிப்பாய்கள் என
இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின்
எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டாலும் கொரோனா நோயிலிருந்து
குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை
ஏற்பட்டுள்ளது. இதுவரை 382 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
533 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments:
Post a Comment