• Latest News

    May 11, 2020

    பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

    (எம்.சஹாப்தீன்)
    நிந்தவூரைச் சேர்ந்த ஏ. றபீக் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பு பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் நிலையிலே 2020.05.11ஆம் திகதி அமுலாகும் வகையில் பொலிஸ் பரிசோதகர்(Inspector of Police) பதவியிலிருந்து பிரதம பொலிஸ் பரிசோதகராக (Chief Inspector Of Police)  இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று தனது பதவி உயர்வினை ஏற்றுக் கொண்டார்.

    நிந்தவூர் 04ஆம் பிரிவைச் சேர்ந்த இவர் அலியார் தம்பதிகளின் புதல்வராவார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 31 வருடமாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் இவர் 1989ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸில் இணைந்து கொண்டார். 

    மொனராகல, தங்கால, கதிர்காமம், கொழும்பு, மொனராகல – மெதகம, சீம்புலாண்டுவ, தனமல்வில, வெள்ளவாய, வவுனியா, மத்திய முகாம், சம்மாந்துறை, கல்முனை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளார். இப்பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய போது பல முக்கிய பதவிகளில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலேயே அதிக சேவைக் காலத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top