(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கு நாளொன்றுக்கு 435000.00 ரூபா தேவைப்படுகின்றது. இந்த நிதியை ஈடு செய்வதற்காகவே குடியிருப்பாளர்களிடமிருந்து ஒருவாரத்திற்கு 50.00 ரூபாவை அறவீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மாநகரசபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்பட்டது. என கல்முனை மாநகரசபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்று(17.05.2020) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதல்வர் இந்த தகவல்களை வெளியிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளாந்தம் மாநகர சபையை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றார்கள். குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்கு நாநொன்றுக்கு 435,000 ரூபா செலவு செய்யவேண்டி உள்ளது. இது மாதமொன்றுக்கு ஒரு கோடி 30 லட்சம் ரூபாவாகும்.
தற்போது நாளுக்கு நாள் வர்த்தக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் கழிவுகளும் அதிகரிக்கின்றன. இதனால் குடியிருப்பாளரிடமிருந்து வாரம் ஒன்றுக்கு 50.00 ரூபாவை அறவீடு செய்ய சபையினால் தீர்மாணிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் சபையினுடைய தீர்மானமாகும்.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சில உறுப்பினர்கள் தடையாக செயல்படுவது கவலை அளிக்கிறது. மக்களின் நலனுக்காகவே மாநகரசபை தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. எனவே பொதுமக்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தார்.

0 comments:
Post a Comment