• Latest News

    May 13, 2020

    நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக் குழு

    ஜூன் 20ம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் தடைகள் தொடர்கின்றன.

    இன்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து தேர்தல் தொடர்பில் இறுதிமுடிவை எடுக்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோரியுள்ளனர்.

    இதேவேளை நாளையும் அரசியல்கட்சி செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சந்திப்பை நடத்தவுள்ளனர்.

    இந்நிலையில் ஜூன் 20 தேர்தல் நடத்தப்படக்கூடாது என்றுக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் அதன் தீர்ப்பு வெளியான பின்னர் தேர்தல் திகதி தொடர்பில் முடிவெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக் குழு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top