• Latest News

    May 13, 2020

    பிரித்தானிய பிரதமரின் உரைக்கு பொது மக்கள் அதிருப்தி

    பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது உச்சத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் வழங்குனர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன். மீண்டும் தமது தொழில்களுக்கு செல்லும் பிரித்தானியர் பாரிய மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத அதிகமான மக்கள் வேலைகளுக்கு செல்ல விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் நேற்று கூறியுள்ளார்.

    தமது ஊழியர்கள் மற்றைய நபர்களுக்கு நோய் பரப்புவதை தவிர்த்தல் மற்றும் அலுவலங்களுக்குள்ளும் வெளியிடும் கையாள வேண்டிய நடைமுறைகளை அரச இணையத்தளத்தில் 8 ஆவணங்களை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.

    5 நபர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து பணியிடங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பாதுகாப்பு முறைமைகளை கையாள வேண்டும்.

    மேலும் பணியிடங்களில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்காக தொழில் வழங்குனர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்களுடன் கலந்துரையாட வேண்டும்.

    பணியிடங்களில் உணவகங்களை திறக்கக் கூடாது, ஊழியர்களுக்கு இடையில் 2 மீற்றர் இடைவெளியை பேண வேண்டும். நபர்களுக்கு இடையில் திரைகளை பயன்படுத்த வேண்டும் என்பதுடன் பொதி செய்யப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும்.

    ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மதுபான நிலையங்களை மூடி வைக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் உணவுகளை எடுத்துச் செல்லும் வசதிகளை மாத்திரம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் தமது உணவை பெற்றுக்கொள்ளும் வரை வெளியில் இருக்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.

    வாடிக்கையாளர்கள் தனியாக வருவதை வர்த்தக நிலையங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் வரிசைகளை பராமரிக்க ஏனைய வர்த்தக நிலையங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு வர்த்தக நிலையங்களிடம் கோரப்படுகிறது.

    ஊழியர்கள் தமது கைகளை கழுவதை வணிக நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேற்பரப்பில் மேலதிக தூய்மையை பேண வேண்டும்.

    நிறுவனங்கள் முடிந்தளவில் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களால் முடியாவிட்டால், திட்டமிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்ற எவரும் கடமைப்பட்டிருக்கவில்லை எனவும் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊழியர்கள் பணியாற்றும் போது அவர்கள் இடையில் இரண்டு மீற்றர் இடைவெளியை பேணி பாதுகாப்பாக இருக்க முடியாது போனால், பாதுகாப்பு கேடயங்களை பயன்படுத்துதல், வேலை செய்யும் நேரத்தை குறைத்தல், ஒருவருக்கு பின் ஒருவர் அமர்ந்து பணியாற்றுதல் அல்லது வேறு நபர்களுடனான தொடர்புகளை வரையறுக்கும் நிலையான அணிகள் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து நிறுணவங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    வேலை செய்யும் போது முக கவசம் அணிவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    அதேவேளை மேலதிக பணியாளர்கள், தொடர்பாடல் நிலையங்களின் ஊழியரக்ள், இடங்களை பரிசோதித்தல் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றவா என்பதை பரிசோதிக்க 14 மில்லியன் பவுண் மேலதிக நிதி சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அமுல்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படுவதை நிராகரித்தால், அபராதம் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் நேற்றிரவு வெளியிட்ட முடக்கல் நடவடிக்கைளில் இருந்து வெளியேறும் வழிமுறைகள் தொடர்பாக பொது மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

    அத்துடன் பிரித்தானியாவின் புதிய சட்டத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்துவதாக நேற்று மாலை டவுனிங் வீதியில் நடைபெற்ற கலந்துரையாடலில், பூங்காவில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் நடமாடும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.

    மேலும் யார் பணிகளுக்கு செல்லாம் என்பதற்கான புதிய அறிவுறுத்தல்கள் தெளிவற்றதாக இருப்பதாகவும் இது ஏன் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரித்தானிய பிரதமரின் உரைக்கு பொது மக்கள் அதிருப்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top