• Latest News

    August 24, 2020

    இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய் - 37 பேர் பலி

    இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது.

    இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4554 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

    குறித்த காலப்பகுதியில் 37 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1146 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடத்தில் எலிக்காய்ச்சலினால் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய் - 37 பேர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top