• Latest News

    August 28, 2020

    ராஜித, ரூமிக்கு குற்றப்பத்திரிகை; பிணையில் விடுவிப்பு

    கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

    மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகளை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 500,000 ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கும், குறித்த  இரண்டு பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    பிணையாளர்கள் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்கள் என கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொலிஸ் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜித, ரூமிக்கு குற்றப்பத்திரிகை; பிணையில் விடுவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top