• Latest News

    August 27, 2020

    ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள்தான் என ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்தார் - எரிக் சொல்ஹெம்

     ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் காந்தியை கொலை விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் உலகிற்கு வெளிப்படுத்துமாறும் குறித்த டுவிட்டர் பயன்பாட்டாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ராஜீவ் காந்தியை கொலை செய்தது தாம் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்திருந்ததையும் அந்த டுவிட்டர் பயன்பாட்டாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த எரிக் சொல்ஹெம், ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள்தான் என ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்தார் - எரிக் சொல்ஹெம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top