• Latest News

    August 24, 2020

    அத்துரலியே ரதன தேரர் விரைவில் கைது செய்யப்படலாம் ?

     எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியது அத்துரலியே ரதன தேரர் என ஏற்கனவே முறைப்பாடு கிடைத்துள்ளது.

    இதற்கு அமைய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதை அத்துரலியே ரதன தேரர் தொடர்ந்தும் தவிர்த்து வந்தால், அவரை கைது செய்ய நேரிடும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும், ரதன தேரர் அதனை தவிர்த்து வருவதாகவும், இது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் எனவும் சட்டவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதனால், அத்துரலியே ரதன தேரர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அத்துரலியே ரதன தேரர் விரைவில் கைது செய்யப்படலாம் ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top