• Latest News

    August 22, 2020

    பாடசாலை நேரங்களில் மாற்றம்

     கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
     
    இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான நேர அட்டவணைகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
     
    அதன்படி, தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
     
    இதுவரை காலமும் தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை  குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாடசாலை நேரங்களில் மாற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top