• Latest News

    August 30, 2020

    ஐ.தே.கவின் தலைமயை ஏற்க நான் தயார்!

    இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

    ஐக்கிய தேசியக்கட்சி தம்மை ஏற்றுக்கொண்டால் அதற்கு தலைமை தாங்க தாம் தயாராக இருப்பதாக அர்ஜூன ரணதுங்க இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    அண்மையில் நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஒரு சிலரின் பெயர்களுடன் தனது பெயர் முன்மொழியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சி மேலும் பிளவுபடாமல் இருக்க எதையும் செய்ய தயாராக இருப்பதாக ரணதுங்க கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.கவின் தலைமயை ஏற்க நான் தயார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top